'கடையை மூட முடியாது'...வேணும்னா சூடா பரோட்டா தாரேன்,சாப்பிட்டு போங்க...போராட்டக்காரர்களை அலற விட்ட,கேரள மக்கள்!வைரலாகும் வீடியோ!
Home > தமிழ் newsசபரிமலை கோயிலில் இரு பெண்கள் வழிபட்டதையடுத்து கேரளாவில் கடும் வன்முறை வெடித்துள்ளது.அங்கு நடந்த பந்தில்,பாரதிய ஜனதா கட்சியினருக்கும்,மார்க்ஸிஸ்ட் கட்சித் தொண்டர்களும் கடும் மோதல் ஏற்பட்டது.இதனால் கேரளாவில் ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.தொடர் போராட்டங்கள் கேரளாவின் இயல்பு நிலையினை கடுமையாக பாதித்துள்ளது.
கேரளாவில் சபரிமலை கர்ம சமிதி என்ற அமைப்பும் பாரதிய ஜனதா கட்சியும் சேர்ந்து இந்த போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.இந்த போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து,ஆளும் கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் மக்களுக்கு பெரிய அளவில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.சபரிமலை கர்ம சமிதி அமைப்பினர்க்கும்,மார்க்ஸிஸ்ட் கட்சித் தொண்டர்களும் இடையில் நடந்த மோதல் வீடியோகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மலபுரம் மாவட்டத்தில் உள்ள எடப்பல் என்ற இடத்தில்,நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் கைகளில் கொடியுடன் இருசக்கர வாகனத்தில் கூட்டமாக வந்தார்கள்.அப்போது அங்கு பாதுகாப்பிற்காக நின்றிருந்த காவல்துறையினரும்,அந்த பகுதியில் இருந்த பொதுமக்களும் போராட்டக்காரர்களை விரட்டி அடித்தனர்.அப்போது போராட்டக்காரர்கள் நாலா புறமும் சிதறி ஓடினார்கள்.இதனை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியிருக்கிறார்கள்.அந்த வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.
மேலும் கொச்சியில்,இதுபோன்று நடந்த ஒரு சம்பவம் தற்போது வைரலாகி வருகிறது.அங்கிருந்த ஹோட்டல் முன்பு கூடிய போராட்டக்காரர்கள்,ஹோட்டலை மூடுமாறு பிரச்சனை செய்கிறார்கள்.அப்போது அங்குவந்த கடைக்காரர் ''கடையை மூட முடியாது,சூடா பரோட்டா இருக்கு''என நக்கலாக பதிலளித்து விட்டு சென்று விடுகிறார்.அப்போது அங்கிருந்த இளைஞர்கள் போராட்டக்காரர்களை வெளியில் செல்லுமாறு பிடித்து தள்ளுகிறார்கள்.இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.