கேரள வனத்துறையினரை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்திய ஒரு வயது குழந்தை.!

Home > தமிழ் news
By |
கேரள வனத்துறையினரை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்திய ஒரு வயது குழந்தை.!

தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்து கேரள மாநிலத்தில் கடந்த 10 நாட்களாக மழை கொட்டித்தீர்த்தது. 14 மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கின. மழை வெள்ளத்திலும், நிலச்சரிவிலும் சிக்கி 350-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

 

முப்படைகளின் உதவியுடன் பல மக்கள் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.மீனவர்கள் பல வழிகளில் மீட்பு குழுவினருக்கு உறுதுணையாக இருந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

 

பல வழிகளிலும் கேரளாவிற்கு உதவிகள் வந்த வண்ணம் உள்ளது.தற்போது கேரளா தனதுஇயல்பு நிலைக்கு திரும்பி வந்த வண்ணம் உள்ளது.வெள்ளம் வடிய தொடங்கிய நிலையில் மக்கள் தங்களின் வீடுகளுக்கு திரும்பிய வண்ணம் உள்ளனர்.ஆனால் பத்தனம்திட்டா மாவட்டத்தின் சில பகுதிகளில் வெள்ளம் இன்னும் முழுமையாக வடியவில்லை.

 

இந்நிலையில் பத்தனம்திட்டா பகுதிக்குட்பட்ட ரானி சரகத்தில் பிம்மராம் என்னும் மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதியில் இருந்து ஒரு வயது குழந்தையை வனத்துறையினர் மீட்டுள்ளனர்.வெள்ளத்தால் வீட்டிலிருந்து வெளியேற முடியாமல் தவித்த அந்த குடும்பத்தை மீட்டதோடு  மிகுந்த போராட்டத்திற்கு பிறகு ஒரு வயது குழந்தையையும்  பத்திரமாக மீட்டார்கள்.

 

ஒரு வயது குழந்தையை பத்திரமாக மீட்டது வனத்துறையினரை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியது.

KERALAFLOOD, KERALA FOREST DEPT