கருணாநிதியை சந்திக்க 'காவேரி மருத்துவமனைக்கு' நேரில் வந்த பினராயி விஜயன்!
Home > தமிழ் news
உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலத்தில், முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கருணாநிதியை சந்திப்பதற்காக, காவேரி மருத்துவமனைக்கு இன்று காலை வருகை தந்தார். அங்கு அவர் ஸ்டாலினை சந்தித்து கருணாநிதியின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.
தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் , ‘'மூத்த அரசியல் தலைவர்களுள் ஒருவரான திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலத்தில் தற்போது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக, அவரது குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். அவர் ஒரு பிறவி போராளி என்பது அனைவருக்குமே தெரியும். அவர் பூரண நலம் பெற்று வருவது ஆறுதல் அளிக்கிறது,'' என்றார்.
MKSTALIN, KARUNANIDHIHEALTH, MKARUNANIDHI, DMK, KANIMOZHI, PINARAYIVIJAYAN, KAUVERYHOSPITAL, KERALACHIEFMINISTER