307ன் கீழ் கைதான கருணாஸ்..எழும்பூர் நீதிமன்றத்தின் உத்தரவு!

Home > தமிழ் news
By |
307ன் கீழ் கைதான கருணாஸ்..எழும்பூர் நீதிமன்றத்தின் உத்தரவு!

நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் இன்று அதிகாலை பல்வேறு அவதூறு பேச்சுகளை பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டார். அப்போது காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்படும் முன், அவர் செய்தியாளர்களிடையே பேசினார்.

 

அதில், ‘ஒரு சட்டமன்ற உறுப்பினரை கைது செய்ய வேண்டும் என்றால் சபாநாயகரிடம் அரசு அனுமதி பெற்றிருக்க வேண்டும். அந்த அனுமதி பெறப்பட்டதா என தெரியவில்லை. பிரிவு 307 -ன் கீழ் கைது செய்யப்பட வேண்டிய அளவிற்கு என்ன தவறு செய்தேன் என தெரியவில்லை’ என்று பேசிய கருணாஸ், பேச்சுரிமையை அரசு தொடர்ந்து முடக்குவதாகவும் குற்றம் சாட்டிய கருணாஸ், தன் சமூக இளைஞர்களை ஒருங்கிணைப்பதற்காகவும் தான் பேசியதாகவும் தெரிவித்தார். 

 

அதுமட்டுமல்லாமல், ’நாங்கள் துப்பாக்கியை காட்டியபோது நெஞ்சை நிமிர்த்தி நின்ற சீவலப்பேரி பாண்டிய வம்சம்.. இந்த சிறை எங்களுக்காகவே கட்டப்பட்டிருக்கிறது’ என்று பேசியவர், சட்டமன்ற உறுப்பினராகவும், ஜனநாயக குடிமகனாகவும் சட்டத்தை மதித்து நீதிமன்றத்தினை சந்திக்க தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.

 

இந்நிலையில், கருணாஸை வருகிற அக்டோபர் 5ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க வேண்டும் என எழும்பூர் நீதிமன்றத்தின் 13வது நீதித்துறை நடுவர் கோபிநாத் உத்தரவிட்டு தீர்ப்பளித்துள்ளார். மேலும்  கருணாஸ் மீது போடப்பட்ட கொலை முயற்சி வழக்கு, பிரிவு 307-ஐ ரத்து செய்தும் உத்தரவிட்டார்.

EDAPPADIKPALANISWAMI, KARUNASARRESTED, 307, ACTOR, MLA, TAMILNADU