'கருணாநிதிக்கு மெரினாவில் இடம்'.. வழக்கில் காலை 8.30 மணிக்கு தீர்ப்பு!
Home > தமிழ் newsதிமுக தலைவர் கருணாநிதி இன்று மாலை 6.10 மணிக்கு இறந்ததாக காவேரி மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டது. அதில் எவ்வளவு சிகிச்சை அளித்தும் கருணாநிதியை காப்பாற்ற முடியவில்லை என தெரிவித்திருந்தது.
முன்னதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை, ஸ்டாலின் நேரில் சந்தித்து மெரினாவில் உள்ள அண்ணா சமாதியில் கலைஞருக்கு இடம் ஒதுக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.
பதிலுக்கு சட்ட சிக்கல்கள் இருப்பதால் அண்ணா சமாதியில் இடம் ஒதுக்க முடியாது என்றும், அதற்கு பதிலாக காந்தி மண்டபம் அருகே 2 ஏக்கர் நிலம் ஒதுக்க தயார் என்றும் தமிழக அரசு அறிக்கை வெளியிட்டது.
இதனைத்தொடர்ந்து திமுக தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி(பொறுப்பு) ஹூலுவாடி ரமேஷ்,நீதிபதி சுந்தர் ஆகிய இருவரும்இந்த மனுவை அவரச வழக்காக எடுத்து நேற்றிரவு 11.40 மணியளவில் தங்கள் விசாரணையைத் துவங்கினர்.
சுமார் ஒன்றரை மணி நேரம் இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தமிழக அரசு பதிலளிக்க கால அவகாசம் அளித்து, காலை 8 மணிக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.