ஜேசிபி வாகனத்தில் அமர்ந்து புதுமண தம்பதியர் ஊர்வலம் சென்ற புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

 

கர்நாடகா மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த ஜேசிபி ஆபரேட்டர் சேடனுக்கும்-மமதா என்பவருக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த பின் சேட்டன்-மமதா இருவரும் ஜேசிபி வாகனத்தில் உள்ள தூக்கியில் அமர்ந்து வீடுவரை ஊர்வலமாகச் சென்றனர். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகின்றன.

 

தனது பணிமீது உள்ள மரியாதையாலும், தான் கஷ்டப்பட்டு வாங்கிய ஜேசிபி இயந்திரத்தின் மீது கொண்ட அன்பினாலும் தான் இவ்வாறு செய்ததாக மணமகன் சேட்டன் இதுகுறித்து தெரிவித்துள்ளார்.

BY MANJULA | JUN 20, 2018 1:56 PM #KARNATAKA #JCB #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS