கடந்த 1966-ம் ஆண்டு பிரதமராக தேவ கவுடா இருந்தபோது குஜராத் தேர்தலில் வெற்றிபெற்று பாஜக ஆட்சியைப் பிடித்தது. அப்போது குஜராத் பாஜக தலைவராக வஜுபாய் இருந்தார். மாநில முதல்வராக 121 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவுடன் சுரேஷ் மேத்தா பதவியில் அமர்ந்தார்.

 

அதே நேரம் பாஜக-வில் உள்கட்சி மோதல் வெடித்தது. இதனால் பாஜக மூத்த தலைவர் சங்கர்சிங் வகேலா பாரதிய ஜனதா கட்சியை உடைத்து, ராஷ்ட்ரிய ஜனதா கட்சி என்ற பெயரில் புதிய கட்சியை உருவாக்கினார். தனக்கு 40 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு இருப்பதாகக் கூறி, சுரேஷ் மேத்தா அரசின்மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவந்தார். இதனைத் தொடர்ந்து  குஜராத் ஆளுநர், முதல்வர் சுரேஷ் மேத்தாவை ஆதரவை நிரூபிக்க உத்தரவிட்டார்.

 

செப்டம்பர் 18-ந் தேதி, சுரேஷ் மேத்தா தனிப் பெரும்பான்மையை நிரூபித்தார். மேற்கண்ட நிகழ்வுகளினால் குஜராத் சட்டமன்றத்தில் பெரும் அமளி ஏற்பட்டது. இதனால், நள்ளிரவில் சுரேஷ் மேத்தா, தன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களை ஆளுநரிடம் ஆஜர்படுத்தினார். எனினும் பலன் கிடைக்கவில்லை. அடுத்த 24 மணி நேரத்தில் சுரேஷ் மேத்தா அரசு டிஸ்மிஸ் செய்யப்பட்டது.

 

அதே நேரத்தில் பிரதமராக இருந்த தேவகவுடா, குஜராத் அரசை டிஸ்மிஸ் செய்ய குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மாவுக்குப் பரிந்துரை செய்தார். முன்னதாக, குஜராத் விவகாரத்தில் மத்திய அரசு தலையிடாது என்று பாரதிய ஜனதா கட்சித் தலைவர் வஜுபாய்க்கு அளித்த உறுதி மொழியை தேவகவுடா மறந்தார்.

 

22 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. தற்போது, கர்நாடகத்தில் ஆட்சியமைக்க மதச் சார்பற்ற ஜனதா தள கட்சிக்குப் போதிய ஆதரவு உள்ளது., எனினும், எடியூரப்பாவை முதல் அமைச்சராகப் பதவியேற்க கர்நாடக ஆளுநர் வஜுபாய் வாலா அழைத்துள்ளார். எடியூரப்பாவும் இன்று காலை கர்நாடக முதல்வராகப் பதவியேற்றுவிட்டார்.

 

சுமார்  22 ஆண்டுகளுக்குப் பிறகு, வஜுபாய்  தனக்குக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி தேவகவுடாவைப் பழிவாங்கியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS