‘இதென்ன மருத்துவமனையா..மதுபானக் கடையா?’: டென்ஷனான கலெக்டர் விதித்த அபராதத் தொகை!
Home > தமிழ் newsகாஞ்சிபுரம் அரசு மருத்துவமனை சுகாதாரமற்று இருப்பதை பார்வையிட்ட அம்மாவட்ட ஆட்சியர், மருத்துவமனை அவ்வளவு அசுத்தமாகவும் சுகாதாரமான முறையில் பராமரிக்கப்படாததற்கும் பெரும் அதிருப்தியை தெரிவித்துள்ளார்.
மேலும் இதுபோன்று சுகாதாரமற்ற வகையில் இருக்க கூடாது என பொதுமக்களுக்கு அறிவுறுத்தும் ஒரு சுகாதார நிலையமான மருத்துவமனை இத்தனை அசுத்தமாகவும் எளிதில் நோய்களை பரப்பக்கூடிய நிலையிலும் இருந்தால் பொதுமக்களுக்கு அறிவுறுத்த செய்ய வேண்டிய மருத்துவர்களே தம் மருத்துவமனையினை இவ்வாறு வைத்திருக்கலாமா என்கிற கேள்விதான் எழுகிறது.
இறுதியாக மாவட்ட ஆட்சியர் பொன்னையா செய்த அதிரடி காரியம் இதுதான். அந்த மருத்துவமனை வளாகத்தில் மதுபாட்டில்கள் எல்லாம் இருந்ததால் இது என்ன மருத்துவமனையா அல்லது மதுபானக்கடையா என்று கேள்வி எழுப்பியவர், ஒட்டுமொத்தமாக சுகாதாரமாக இல்லாததால், இந்த மருத்துவமனைக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளார்.
மேலும் இந்த அபராதத் தொகையை அரசு பணத்தில் இருந்து கட்டாமல், மருத்துவமனை பணியாளர்கள் அனைவரும் அவரவர் சொந்த பணத்தில் இருந்து கட்ட வேண்டும் எனவும் ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.