’கண்டிக்கத்தக்கது’: நெல்லை பல்கலைக்கழக மாணவர் போராட்ட வன்முறை பற்றி கமல் ட்வீட்!
Home > தமிழ் newsமனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கும், மாணவர்களுக்குமான கருத்து வேறுபாட்டை, சுமூகமாகத் தீர்த்துவைக்கும் நடவடிக்கைகள் எடுக்காமல், காவலர்கள் வன்முறையால் கட்டுப்பாடு ஏற்படுத்த நினைத்தது கண்டிக்கத்தக்கது என்று நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின், திருநெல்வேலியில் இயங்கும் மேற்கண்ட கல்லூரியில் தமிழ் வழிக்கல்வி பயின்ற மாணவர்கள் கொஞ்ச காலமாக கல்லூரிக்கு வந்த பிறகும் தமிழ் வழியில் தேர்வுகளை எழுதினர். ஆனால் கல்லூரிகளின் பாடங்கள் எல்லாமே ஆங்கில கல்வி வழியில் இருப்பதால், அனைவரையும் ஆங்கில வழியிலேயே தேர்வெழுத வேண்டும் என நிர்வாகம் திடீர் உத்தரவினை பிறப்பித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவர்கள், திடீரென ஆங்கில வழிக் கல்வியில் தேர்வெழுதும் முறைமையை எதிர்த்து போராட்டதில் ஈடுபட்டனர்.
எனினும் சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர், போராட்டம் நடத்திய மாணவர்களை கட்டுப்படுத்த தொடங்கினர். ஆனால் எதிர்பாராத விதமாக நிகழ்ந்த தள்ளிமுள்ளுவினால், அந்த இடம் கலவரக் களமாக மாறியது. இதனால் இருதரப்பினரும் வன்முறையில் ஈடுபட்டனர். இதனை கண்டிக்கும் விதமாகவே கமல்ஹாசன் இத்தகைய கருத்தினை பதிவிட்டிருக்கிறார்.