நடிகர் கமல்ஹாசன் #AskKamalHaasan #VanakkamTwitter என்ற தலைப்பில் ட்விட்டரில் கேள்வி கேட்பவர்களுக்கு பதிலளிக்கிறார். பிக்பாஸ் ஷூட்டிங்கில் பிஸியாக இருந்தாலும் இடையிடையே ரசிகர்களின் கேள்விகளுக்கு கமல் பதிலளித்தார்.அதில் சசிகுமார் என்னும் ரசிகர் உங்களின் தம்பி @actorvijay அண்ணண் அரசியலுக்கு வந்தால்  நீங்கள் வரவேற்பீகளா #AskKamalHaasan #VanakkamTwitter என்று கேட்டிருந்தார்.

 

அதற்கு பதிலளித்துள்ள கமல்ஹாசன், "எனது அனைத்து தம்பிகளையும் வரவேற்கிறேன், அதுவும் இவர் எனக்கு மிகவும் பிடித்த தம்பி, எனக்கு மட்டுமல்ல,அனைவருக்குமே பிடித்த தம்பி, கண்டிப்பாக வரவேற்கிறேன்,'' என்று பதிலளித்துள்ளார்.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS