"6 மணி நேரம் தூங்கினால் மட்டும் போதும்"...ரூ.42,000 ஊக்கப்பரிசு அளிக்கும் நிறுவனம்!
Home > தமிழ் newsநிம்மதியான தூக்கம் அனைவருக்கும் அத்தியாவசமான ஒன்றாகும்.தற்போதைய இயந்திர வாழ்க்கையில் பலருக்கு தூக்கம் என்பதே கனவாக போய்விட்டது.இந்நிலையில் ஜப்பானைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று இரவில் குறைந்தது 6 மணி நேரம் தூங்கினால் ரூ.42ஆயிரம் வரை ஊக்கப்பரிசு வழங்கப்படும் என அறிவித்து ஆச்சரியப்படுத்தியுள்ளது.
ஜப்பானைச் சேர்ந்த கிரேசி இண்டெர்நேஷ்னல் என்ற நிறுவனம் திருமணங்களை நடத்தி வைக்கும் பணியினை மேற்கொன்டு வருகிறது.இந்த நிறுவனம் தான் தனது ஊழியர்கள்,வாரத்திற்கு 5 நாட்கள் இரவில் 6 மணி நேரம் தூங்க வேண்டும்.அவ்வாறு முழுமையாக தூங்கும் ஊழியர்களுக்கு ரூ.42ஆயிரம் வரை ஊக்கப்பரிசு வழங்கப்படும் என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டு அதிகாரி கூறுகையில் "ஆண்கள், பெண்கள் என 20 வயதுக்குட்பட்ட இளைஞர்களில் 92% பேர் இரவு சரியாக தூங்குவதில்லை. சரியாக தூங்காத ஊழியர்களால் அலுவலக வேலைகள் பாதிக்கின்றன. தூக்கத்தின் தேவையை உணர்த்த இப்படிச் செய்கிறோம்.இது ஊழியர்களின் உடல்நலனை மேம்படுத்தும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஊழியர்களின் தூங்கும் நேரத்தைக் கணக்கிட பிரத்தியேகமான செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. 6 மணி நேரத்தை சரியாக பூர்த்தி செய்யும் ஊழியர்களுக்கு புள்ளிகள் வழங்கப்படும். இந்தப் புள்ளிகளின் அடிப்படையில் அந்த நிறுவனத்தின் உணவகத்தில் ஆண்டுக்கு 42,000 ரூபாய் வரை (இந்திய மதிப்பில்) சாப்பிட்டுக்கொள்ளலாம் அல்லது பணமாகவே வாங்கிக்கொள்ளலாம். இது கிரேசி இண்டெர்நேஷ்னல் ஊழியர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது.