முதல்முறை விண்கல் மீது 2 ஆளில்லா ரோவர்கள் அனுப்பி வரலாறு படைத்த நாடு!

Home > தமிழ் news
By |
முதல்முறை விண்கல் மீது 2 ஆளில்லா ரோவர்கள் அனுப்பி வரலாறு படைத்த நாடு!

உலகிலேயே விண்கல்லில் முதல்முறையாக இரண்டு ஆளில்லா ரோவர்களை தரையிறக்கியுள்ள ஜப்பானின் சாதனை உலக நாடுகளின் விண்வெளி ஆராய்ச்சிகளிடையே தனி வரலாற்றை படைத்துள்ளது. விண்வெளி ஆராய்ச்சிகளுக்கு உதவும் வகையில் அமைக்கப்பட்ட இந்த சிறிய இரண்டு ஆளில்லா ரோவர்கள் தரையிறக்கப்பட்டதனால் உண்மையில் ஜப்பான் வரலாறு படைத்துள்ளதாக உலக நாடுகளின் பாராட்டை பெற்றுவருகிறது.

 

முன்னதாக 2014-ம் ஆண்டு, பூமிக்கு அருகில் ரைகு என்கிற விண்கல்லின் மாதிரிகளை சேமிக்க,  ஹெயபுஸா-2 என்கிற விண்கலம் ஜூன் மாதம் ரைகுவை அடைந்தது.  ஹயபுஸாவின் அமைக்கப்பட்ட மினர்வா-2  என்கிற மனிதர்களற்ற ரோவர்கள் இரண்டும் விண்கல் மீது  வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது. இதனை அறிவித்த ஜப்பான் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ஜாக்ஸா, அதன் புகைப்படங்களையும் எடுத்து அனுப்பியுள்ளது.

JAPAN, SPACE