Looks like you've blocked notifications!
சென்னை vs மும்பை: முதல் போட்டியை 'வெற்றிக்கணக்குடன்' துவங்குமா தோனி படை?

11-வது ஐபிஎல் போட்டிகள் கோலாகலமாக மும்பை வான்கடே மைதானத்தில் இன்று  துவங்கியுள்ளன. முதலாவது போட்டியில் நடப்பு சாம்பியன்ஸ் மும்பை இந்தியன்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எதிர்கொள்கிறது.

 

2 ஆண்டுகள் தடைக்குப் பிறகு, மீண்டும் ஐபிஎல் கிரிக்கெட்டில் நுழைந்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனியின் தலைமையின் களம் காணுகிறது. அதேபோல 3 முறை ஐபிஎல் சாம்பியன்களான மும்பை இந்தியன்ஸ் அணி, சென்னை அணிக்கு சவால் அளிக்க கேப்டன் ரோஹித் தலைமையின் கீழ் களம் காணுகிறது.

 

2 அணிகளும் பலம் வாய்ந்த அணிகள் என்பதால், மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெறும் முதலாவது ஆட்டம் மிகுந்த பரபரப்புடன், எளிதில் வெற்றி வாய்ப்பை கணிக்க முடியாத வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

ஐபிஎல்லில் இதுவரை இரு அணிகளும் 22 ஆட்டங்களில் மோதியுள்ளன, இதில் மும்பை இந்தியன்ஸ் 12 போட்டிகளில் வென்று ஆதிக்கம் செலுத்த சென்னை சூப்பர் கிங்ஸ் 10 முறை வென்றுள்ளது.

 

முதலாவது போட்டியை வெற்றிக்கணக்குடன் துவங்குமா தோனி படை? பொறுத்திருந்து பார்ப்போம்.

BY MANJULA | APR 7, 2018 6:31 PM #CSK #IPL2018 #MSDHONI #MUMBAI-INDIANS #ROHITSHARMA #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS