மும்பையில் இன்றிரவு 7 மணிக்கு நடைபெறவுள்ள பிளே-ஆஃப் போட்டி ரத்தானால், நேரடியாக பைனல் செல்லும் வாய்ப்பு யாருக்குக் கிடைக்கும் என்னும் உண்மை தற்போது வெளியாகியுள்ளது.

 

நடப்பு ஐபிஎல் போட்டிகளின் அனைத்து லீக் போட்டிகளும் 2 நாட்களுக்கு முன் முடிவுக்கு வந்தன. இதில் ஹைதராபாத், சென்னை, கொல்கத்தா, ராஜஸ்தான் ஆகிய 4 அணிகளும் ரன்ரேட் அடிப்படையில் பிளே-ஆஃப் சுற்றில் கால்பதித்துள்ளன.

 

இன்றிரவு மும்பையில் நடைபெறவுள்ள முதலாவது பிளே-ஆஃப் போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எதிர்கொள்கிறது.

 

இந்த நிலையில், மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடக்கும் முதலாவது பிளே-ஆஃப் போட்டி மழை காரணமாகவோ அல்லது வேறு ஏதாவது ஒரு காரணத்திலோ அல்லது ரசிகர்களின் இடையூறு காரணமாக ரத்து செய்யப்பட்டால், மீண்டும் போட்டி நடத்தப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ஒருவேளை போட்டி ரத்து செய்யப்பட்டால் ரன்ரேட் அடிப்படையில் ஹைதராபாத் அணி நேரடியாக பைனலுக்கு சென்றுவிடும். சென்னை அணி தோல்வி அடைந்ததாகக் கருதப்பட்டு, 2-வது பிளே-ஆஃப் சுற்றில் வெற்றிபெறும் அணியுடன் மோத வேண்டும். இதில் வெற்றி பெற்றால் சென்னை அணி இறுதிப்போட்டிக்கு செல்லலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இதனால் இன்றைய போட்டி சென்னை அணிக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகக் கருதப்படுகிறது.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS