Looks like you've blocked notifications!

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் 11-வது சீசன் போட்டிகள் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று கோலாகலமாகத் தொடங்கியது.

 

தொடக்க நாளான இன்று இரவு 8 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, முன்னாள் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதுகிறது.

 

இந்தநிலையில் நடப்பு ஐபிஎல் போட்டியின் மொத்த பரிசுத்தொகை குறித்த விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. அதன்படி, ஐபிஎல் தொடரின் மொத்த பரிசுத் தொகை ரூ.50 கோடி.

 

இதில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.20 கோடி வழங்கப்படும். 2-வது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.12.5 கோடியும், பிளே ஆப் சுற்றுடன் வெளியேறும் இரு அணிகளுக்கு தலா ரூ.8.75 கோடி வழங்கப்படும்.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS