சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை-கொல்கத்தா அணிகள் இன்று மோதுகின்றன. ஆனால் காவிரி,ஸ்டெர்லைட் போராட்டங்கள் நடைபெற்று வருவதால் ஐபிஎல் போட்டிகளை சென்னையில் நடத்தக்கூடாது என, எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றன.
மேலும் சென்னையின் முக்கிய சாலைகளில் ஒன்றான அண்ணா சாலை அருகே தொடர் போராட்டம் நடைபெற்று வருவதால், ஓட்டலில் தங்கியிருக்கும் கிரிக்கெட் வீரர்கள் மைதானத்துக்கு புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனிக்கு, அணி நிர்வாகம் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி, தோனி இரவில் பைக்கில் வெளியில் செல்லக்கூடாது, நண்பர்களுடன் இரவில் சுற்றக்கூடாது என அணி நிர்வாகம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
எதிர்ப்பு வலுப்பதால் சேப்பாக்கம் மைதானத்தைச் சுற்றி, சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
RELATED NEWS SHOTS
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- IPL 2018: "Vijay is ready to go,” says Michael Hussey
- IPL 2018: Major update on Faf du Plessis’ comeback
- CSK signs promising talent as injury replacement
- IPL2018: SRH's big win against RR
- விருதுக்கான பரிசுத்தொகையை மாற்றுத்திறனாளிக்கு அளித்த ஷாருக்கான்! வைரலாகும் வீடியோ!
- IPL2018: Sunrisers Hyderabad restrict Royals to a low score!
- கருப்பு பேட்ஜ் அணியுமா சென்னை சூப்பர் கிங்ஸ்? பயிற்சியாளர் ஹஸ்ஸி பதில்!
- சென்னை அணியின் முக்கிய வீரர் தொடரில் இருந்து விலகல்!
- Foolish to stop IPL matches: Pon Radhakrishnan
- Will IPL matches happen in Chennai? Official clarification