நடப்பு ஐபிஎல் போட்டிகள் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளன. பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற ஒவ்வொரு அணியும் தீவிரம் காட்டுவதால் பிளே ஆஃப்பில் விளையாடப்போகும் அந்த 4 அணிகள் எது? என, ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

 

இந்த நிலையில் கோடானுகோடியான கிரிக்கெட் ரசிகர்களுக்காக, ஐபிஎல் போட்டிகளின் பிளே ஆஃப் மற்றும் இறுதிப்போட்டியின் நேரத்தை 1 மணி நேரம் முன்னதாக ஐபிஎல் நிர்வாகம் மாற்றியமைத்துள்ளது.

 

இதுகுறித்து ஐபிஎல் சேர்மன் ராஜீவ் சுக்லா நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், " ஐபிஎல் போட்டிகள் அதுவாக இருப்பதற்கு காரணமேரசிகர்கள் தான். மைதானத்திலும் வீட்டில் தொலைக்காட்சி முன்பும் ரசிகர்கள் ஐபிஎல் போட்டிகளை கண்டு களித்து வருகின்றனர். எனவே ரசிகர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பிளே ஆஃப் போட்டிகள் மற்றும் இறுதிப் போட்டி இரவு 7 மணிக்குத் தொடங்கலாம் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.

 

மைதானத்துக்கு வரும் பார்வையாளர்கள் மட்டுமல்ல, வீட்டில் தொலைக்காட்சியில் பார்க்கும் அலுவலகம் செல்வோர், மாணவர்கள் ஆகியோர் காலையில் எழுந்து பணிகளைக் கவனிக்க வேண்டியுள்ளது. ஆகவே போட்டிகள் ஒரு மணி நேரம் முன்னதாகத் தொடங்கினால் அவர்களுக்கு நல்லது,'' என தெரிவித்துள்ளார்.

 

ஐபிஎல் பிளே ஆஃப் போட்டிகள் கொல்கத்தாவிலும், இறுதிப் போட்டி மே 27-ம் தேதி மும்பையிலும் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS