புகைப்பட உதவி @IPL

 

பஞ்சாப்-மும்பை அணிகளுக்கு இடையிலான 34-வது போட்டி இந்தோர் மைதானத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பஞ்சாப்பை பேட் செய்ய பணித்தார்.

 

அதன்படி முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் குவித்தது. பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக கிறிஸ் கெயில் 50 ரன்களும், கே.எல்.ராகுல் 24 ரன்களும் எடுத்தனர்.

 

மும்பை அணியைப் பொறுத்தவரையில் மார்க்கண்டேயா, பென் கட்டிங், பும்ரா, மெக்லெனகன் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

 

இதைத்தொடர்ந்து 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி, தற்போது பேட்டிங் செய்து வருகிறது.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS