புகைப்பட உதவி @IPL

 

மும்பை வாங்கடே மைதானத்தில் தற்போது நடைபெற்று வரும் ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணி பவுலிங் தேர்வு செய்தது. இதனைத்தொடர்ந்து, முதலில் களமிறங்கிய ஹைதராபாத் அணி  18.4 ஓவர்களில், அனைத்து விக்கெட்களையும் இழந்து 118 ரன்களுக்கு சுருண்டது.

 

இதன் மூலம் நடப்பு ஐபிஎல் சீசனின் மிகவும் 'குறைவான ஸ்கோர்' என்ற மோசமான சாதனையை, ஹைதராபாத் அணி பதிவு செய்துள்ளது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் கேன் வில்லியம்சன் 29 ரன்களும், யூசுப் பதான் கடைசி வரை போராடி 29 ரன்களும் எடுத்தனர்.

 

மும்பை அணியில் அதிகபட்சமாக மயாங்க் மார்க்கண்டே, ஹர்திக் பாண்டியா, மெச்சிகன் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.

 

தற்போது மிகவும் சுலபமான 119 ரன்கள் என்ற இலக்கை எட்டிப்பிடிக்கும் முனைப்புடன் மும்பை அணி பேட்டிங் செய்ய களமிறங்கியுள்ளது.
 

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS