Looks like you've blocked notifications!

மும்பை வான்கடே மைதானத்தில் தற்போது நடைபெற்று வரும் முதல் ஐபிஎல் ஆட்டத்தில்  நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, சென்னைக்கு எதிராக பேட்டிங் செய்து வருகிறது.

 

இதில் முதல் ஓவரில் 5 ரன்களை எடுத்த மும்பை 2-வது ஓவரில் வெறும் 2 ரன்களை மட்டுமே எடுத்தது. 3-வது ஓவரின் முதல் பந்தில் 7 ரன்களுக்கு முதல் விக்கெட்டை இழந்தது மும்பை. எவின் லீவிஸ் விக்கெட்டை எல்பிடபிள்யூ முறையில் சென்னை அணியின் சாகர் வீழ்த்தினார்.


சென்னை பந்துவீச்சாளர்களுக்கு எதிராகத் தொடர்ந்து திணறிய மும்பை கேப்டன் ரோகித் ஷர்மா, வாட்சன் பந்து வீச்சில் ராயுடுவிடம் கேட்ச் கொடுத்து 15 ரன்களில் வெளியேறினார். இதனால் பவர்பிளே எனப்படும் முதல் 6 ஓவர்களில், மும்பை இந்தியன்ஸ் அணி 2 விக்கெட்டுகளை இழந்து 39 ரன்களை மட்டுமே எடுத்தது.

 

அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை இழந்தாலும், மும்பை வீரர் சூர்யக்குமார் யாதவ் தொடர்ந்து அபாரமாக ஆடிவந்தார். இந்த நிலையில் 29 பந்துகளில் 43 ரன்களை எடுத்தபோது, வாட்சன் வீசிய 13-வது ஓவரின் 3-வது பந்தில்  தனது விக்கெட்டைப் பறிகொடுத்து சூர்யகுமார் வெளியேறினார்.

 

தற்போதைய நிலையில் 14 ஓவர்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து, 112 ரன்களை மும்பை அணி குவித்துள்ளது.

 

வாங்கடே மைதானத்தில் இரு அணிகளும் இதுவரை 7 முறை மோதியுள்ளன. அதில் 5 முறை மும்பை இந்தியன்ஸ் அணி வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS