கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தற்போது நடைபெற்று வரும் போட்டியில், டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக் பவுலிங் தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியுள்ளது.

 

நடப்பு ஐபிஎல்லில் கொல்கத்தா, ஹைதராபாத் மோதிய ஆட்டங்களில் தலா 1 ஆட்டத்தில் இரு அணிகளும் வெற்றி பெற்றுள்ளன. இரு அணிகளும் இதுவரை ஐ.பி.எல்.லில் 14 போட்டிகளில் நேருக்கு நேராக மோதியுள்ளன. இதில் கொல்கத்தா 9 முறையும், ஐதராபாத் 5 முறையும் வெற்றி பெற்றுள்ளன.

 

பேட்டிங்-பந்துவீச்சு இரண்டிலுமே இரு அணிகளும் ஏறக்குறைய சமபலத்துடன் திகழ்வதால், இறுதிப்போட்டியில் சென்னை அணியுடன் மோதப்போகும் அணி எது? என்பதை அறிந்து கொள்ள ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

 

இரு அணி வீரர்களின் விவரம் பின்வருமாறு:-

 

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: தினேஷ் கார்த்திக்(கேப்டன்), சுனில் நரேன், கிறிஸ் லின், ராபின் உத்தப்பா, ரஸ்ஸல், நிதிஷ் ராணா, சுப்மான் கில், சிவம் மவி, பியூஷ் சாவ்லா, கே யாதவ், பிரசித் கிருஷ்ணா.

 

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: கேன் வில்லியம்சன்(கேப்டன்), ஷிகர் தவான், விருத்திமான் சஹா, பிரெத்வெயிட், யூசுப் பதான், சாகிப் அல் ஹசன், தீபக் ஹூடா, சித்தார்த் கவுல், புவனேஷ்வர் குமார், ரஷீத் கான், கே அஹமது. 

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS