புகைப்பட உதவி @IPL

 

ராஜீவ்காந்தி இன்டர்நேஷனல் மைதானத்தில் தற்போது நடைபெற்று வரும் ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து 182 ரன்களைக் குவித்தது.

 

இதனைத் தொடர்ந்து 183 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஹைதராபாத் அணி, சென்னை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தொடர்ந்து திணறி வருகிறது.

 

குறிப்பாக சென்னை அணியின் தீபக் சாகர் சிறப்பாகப் பந்துவீசி, ஹைதராபாத் அணியின் மணீஷ் பாண்டே, தீபக் ஹூடா, புவி உள்ளிட்ட முக்கிய வீரர்களை ஆட்டமிழக்கச் செய்தார். 4 ஓவர்கள் பந்துவீசிய தீபக் வெறும் 15 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார் என்பதும், இதில் ஒரு ஓவர் மெய்டன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

தற்போதைய நிலையில் 11 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 73  ரன்களை எடுத்துள்ளது.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS