புகைப்பட உதவி Twitter/IPL

 

புனேவில் இன்று மாலை நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்களைக் குவித்தது.இதனைத் தொடர்ந்து 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 19 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றிவாகை சூடியது.

 

இந்த வெற்றி மூலம் பிளே ஆப் சுற்றுக்குள் 2-வது அணியாக உள்ளே நுழைந்துள்ள சென்னை அணியை பிரபலங்கள், ரசிகர்கள் உட்பட பலரும் பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் ஹர்பஜன் சென்னை அணியை அவரது பாணியில் பாராட்டியுள்ளார். 

 

இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில்,"ஓங்கி இடிஇடித்து,ஓயாமல் மின்னல் வெட்டி,பல மணிநேரம் நிக்காமல்  நெரம்பபபெய்த,வரதா புயலால் சென்னைய ஒன்றும் செய்ய இயலவில்லை.பதினொன்று வீரர்களை கொண்டு எங்களை சாய்த்து விடலாம் என்று பார்த்தாயா.இது தலை நிமிர்ந்து நடை போடும் @chennaiipl @RayuduAmbati @ShaneRWatson33 #chahar #விஸ்வாசம்,'' என தெரிவித்துள்ளார்.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS