பெங்களூர் சின்னச்சாமி மைதானத்தில் இன்றிரவு நடைபெறவிருக்கும் ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை எதிர்கொள்கிறது.

 

இதில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி பவுலிங்கைத் தேர்வு செய்துள்ளார். இதனால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதலில் பேட்டிங் செய்யவுள்ளது.

 

கடைசியாக நடைபெற்ற ஆட்டங்களில் பெங்களூர் அணி தோல்வியைத் தழுவியதால், மீண்டும் வெற்றிப்பாதைக்குத் திரும்ப முனைப்பு காட்டும்.இதேபோல சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக வெற்றி பெற்றுள்ளதால், வெற்றியைத் தக்க வைக்க சென்னை அணியும் போராடும். இதனால் இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

 

ஆடும் இரு அணி வீரர்களின் விவரம் பின்வருமாறு:-

 

சென்னை சூப்பர் கிங்ஸ்:தோனி(கேப்டன்), ஷேன் வாட்சன், அம்பாதி ராயுடு, சுரேஷ் ரெய்னா, சாம் பில்லிங்ஸ், ரவீந்திர ஜடேஜா, டுவைன் பிராவோ, தீபக் சாகர், ஷர்துல் தாகூர், ஹர்பஜன் சிங், இம்ரான் தாஹீர்.

 

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்: விராட் கோலி(கேப்டன்), குவிண்டன் டி காக், ஏபிடிவிலியர்ஸ், மன்தீப் சிங், கோரி ஆண்டர்சன், சி டி கிராண்ட்ஹோமி, வாஷிங்டன் சுந்தர், பவன் நெஹி, யஷ்வந்த் சாஹல், உமேஷ் யாதவ், எம்.சிராஜ்.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS