புனேவில் இன்று மாலை நடைபெறவிருக்கும் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை, தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எதிர்கொள்கிறது.

 

இதில் டாஸ் வென்ற சென்னை கேப்டன் தோனி பவுலிங் தேர்வு செய்தார். இதனைத் தொடர்ந்து ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்குகிறது. இன்னும் 1 போட்டியில் வென்றால் பிளே ஆஃப் சுற்றுக்குள் உள்ளே சென்று விடலாம் என்பதால், சென்னை அணிக்கு இந்த போட்டி முக்கியமான போட்டியாகத் திகழ்வது குறிப்பிடத்தக்கது.


இரு அணி வீரர்களின் விவரம் பின்வருமாறு:-

 

சென்னை சூப்பர்  கிங்ஸ்: தோனி(கேப்டன்), சுரேஷ் ரெய்னா, அம்பாதி ராயுடு, ஷேன் வாட்சன், சாம் பில்லிங்ஸ்,ரவீந்திர ஜடேஜா, டுவைன் பிராவோ, தீபக் சாஹர், ஹர்பஜன்சிங், டேவிட் வில்லி, ஷர்துல் தாகூர்.

 

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: ஏ ஹலஸ், தீபக் ஹூடா, கேன் வில்லியம்சன்(கேப்டன்), ஷிகர் தவான், புவனேஸ்வர் குமார், எஸ் கோஸ்வாமி, ரஷீத் கான், சித்தார்த் கவுல், ஷாகிப் அல் ஹசன், மணீஷ் பாண்டே, சந்தீப் சர்மா.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS