புகைப்பட உதவி @BCCI

ஜெய்ப்பூரில் தற்போது நடைபெற்று வரும் ஆட்டத்தில் முதலில் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்து, 176 ரன்களை எடுத்தது.

 

இதனைத் தொடர்ந்து 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கி ஆடி வருகிறது. இதில் போட்டியின் 5-வது ஓவரை ஜடேஜா வீச எதிர்முனையில் ரஹானே எதிர்கொண்டார்.


ரஹானே பேட்டில் பட்ட பந்து பின்னால் நின்ற தோனியின் கைகளில் பட்டு எகிறியது. இதனால் ஒரு கேட்ச் 'மிஸ்' என சென்னை ரசிகர்கள் சோகத்தில் ஆழ, நான் இருக்கேன் என முன்னால் வந்த ரெய்னா அந்த பந்தை சிம்பிளாகக் 'கேட்ச்' பிடித்து ரஹானேவை 4 ரன்களில் பெவிலியனுக்கு அனுப்பி வைத்தார்.

 

9 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 2 விக்கெட்டுகளை இழந்து 85 ரன்களைக் குவித்துள்ளது. குறிப்பாக சென்னை பவுலர்களின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்த பட்லர் 29 பந்துகளில் தனது அரைசதத்தைப் பூர்த்தி செய்தார்.

 

ராஜஸ்தான் அணியின் 'பிங்க்' சீருடை செண்டிமெண்ட் பிளே ஆஃப் செல்ல கைகொடுக்குமா? என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS