மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் இறுதிப்போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற சென்னை கேப்டன் தோனி பவுலிங் தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது.

 

20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 6 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்களைக் குவித்தது. அதிகபட்சமாக ஹைதராபாத் அணியில் வில்லியம்சன் 47 ரன்களும், யூசுப் பதான் 45 ரன்களும் குவித்தனர்.

 

இதனைத் தொடர்ந்து 179 ரன்கள் எடுத்தால் வெற்றி+கோப்பை என்ற இலக்குடன், களமிறங்கிய சென்னை அணி 18.3 ஓவர்களில் 181 ரன்களைக் குவித்து வெற்றி பெற்றது.

 

சென்னை அணியில் ரெய்னா(32) ரன்களிலும், டூ பிளசிஸ் 10 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதிகபட்சமாக வாட்சன் 57 பந்துகளில் 117 ரன்களைக் குவித்து வெற்றிக்கு உறுதுணையாகத் திகழ்ந்தார்.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS