டெல்லியின் பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் இன்றிரவு நடைபெறவிருக்கும் போட்டியில், டெல்லி டேர்டெவில்ஸ் அணியை தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எதிர்கொள்கிறது.

 

நடப்பு ஐபிஎல் போட்டிகளில் முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றிலிருந்து டெல்லி அணி வெளியேறியுள்ளது. அதே நேரம் 8 வெற்றிகளுடன் சென்னை அணி புள்ளிப்பட்டியலில் 2-வது இடத்தைப் பிடித்து, பிளே ஆஃப் சுற்றிலும் கால் பதித்துள்ளது.

 

டெல்லிக்கு எதிராக கடைசியாக நடைபெற்ற போட்டியில் கடுமையாகப் போராடியே சென்னை வென்றது. இதனால் இன்றைய ஆட்டத்திலும் சென்னை-டெல்லி அணிகளுக்கு இடையிலான போட்டி பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இரு அணி வீரர்களின் விவரம் பின்வருமாறு:-

 

சென்னை சூப்பர்  கிங்ஸ்: தோனி(கேப்டன்), சுரேஷ் ரெய்னா, அம்பாதி ராயுடு, ஷேன் வாட்சன், சாம் பில்லிங்ஸ்,ரவீந்திர ஜடேஜா, டுவைன் பிராவோ, தீபக் சாஹர், ஹர்பஜன்சிங், லுங்கி நிகிடி, ஷர்துல் தாகூர்.

 

டெல்லி டேர்டெவில்ஸ்: ஸ்ரேயாஸ் அய்யர்(கேப்டன்), பிரித்வி ஷா, ரிஷப் பண்ட், விஜய் சங்கர், மேக்ஸ்வெல், போல்ட், அமித் மிஸ்ரா,அபிஷேக் சர்மா, சந்தீப் லாமிசென், அவேஷ் கான், ஹர்ஷல்  படேல்.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS