புகைப்பட உதவி @IPL
ஐபிஎல் போட்டியின் 35-வது ஆட்டம் தற்போது மகாராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேஷன் அரங்கில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பவுலிங் தேர்வு செய்தார்.
அதன்படி பெங்களூர் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு பெங்களூர் அணி 127 ரன்கள் சேர்த்தது. டிவிலியர்ஸ், கோலி உள்ளிட்ட முக்கிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். எனினும் பார்த்திவ் படேல்(59), டிம் சவுத்தி(36) ஆகியோரின் பங்களிப்பால் பெங்களூர் அணி 127 ரன்களைச் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.
சென்னை அணியில் அதிகபட்சமாக ஜடேஜா 18 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளையும், ஹர்பஜன்சிங் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனைத்தொடர்ந்து 128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி, தற்போது பேட்டிங் செய்து வருகிறது.
இந்த ஆட்டத்தில் தோல்வி அடைந்தால் பெங்களூர் அணியின் ப்ளே-ஆப் கனவு கானல் நீராகி விடும் என்பதால், அதிகபட்ச போராட்டத்தை அந்த அணி வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
RELATED NEWS SHOTS
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- IPL: Mumbai Indians defeat Kings XI Punjab
- பஞ்சாப் 'பவுலர்களை' பதறவிட்ட கெயில்...மும்பைக்கு 'இலக்கு' இதுதான்!
- Another Chris Gayle show leads KXIP to a comfortable total
- 'சிங்கிள்' பவுண்டரி கூட அடிக்க விடாமல்.. 'தோனி'யை தொடர்ந்து அச்சுறுத்தும் பவுலர்!
- 'யாருமே ஒழுங்காக பந்து வீசவில்லை'.. கடும் விரக்தியில் தோனி!
- IPL playoffs shifted from Pune to this state
- He’s just so much like Sachin Tendulkar: Ex-Aussie batting great about Prithvi Shah
- KKR vs CSK: KKR hands third defeat to CSK
- MS Dhoni goes past Chris Gayle
- Viral Video: Fan breaches security to touch MS Dhoni's feet