சென்னை சூப்பர் கிங்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இடையிலான 5-வது ஐபிஎல் போட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்றது.
இதில் முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களுக்கு 6 விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 202 ரன்களைக் குவித்தது. தொடர்ந்து 2-வதாக பேட் செய்த சென்னை அணி 19.5 ஓவர்களில் 205 ரன்களைக் குவித்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
வெற்றிக்குப்பின் சென்னை கேப்டன் தோனி கூறுகையில், "2 ஆண்டுகளுக்குப் பிறகு வந்து சென்னையில் வெற்றி பெறுவது நல்ல உணர்வைத் தருகிறது. 2 இன்னிங்ஸ்களும் ரசிகர்களுக்குத் தகுதியான இன்னிங்ஸ்களே.ஒரு குறிப்பிட்ட தருணத்தில் பவுலர் மீதும் பேட்ஸ்மென் மீதும் நம்பிக்கை வைக்க வேண்டியது அவசியம். ஆட்டத்தின்போது என்னுடைய இதயத்துடிப்பும் எகிறியது.
அதனால் தான் ஓய்வறை என்ற ஒன்று உள்ளது. என்னுடைய உணர்ச்சிகளை நான் ஓய்வறையில் மறைவாகவே வெளிப்படுத்துவேன். மைதானத்தில் நமது உணர்ச்சிகளை வெளிப்படுத்தினால் அது வர்ணனை செய்பவர்கள் நம்மைப் பற்றி பேசுவதற்கு இடம் கொடுத்ததாகி விடும்.
கொல்கத்தா அணி நன்றாக பேட்டிங் செய்தார்கள். நாங்களும் ரன்களை வழங்கினோம். இரு அணிகளின் பவுலர்களுக்கும் கஷ்ட காலம் தான். ஆனால் விளையாட்டைப் பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்திருப்பார்கள் என நான் உறுதியாக நம்புகிறேன். சாம் பில்லிங்ஸ் ஆட்டம் நன்றாக இருந்தது,'' என்றார்.
RELATED NEWS SHOTS
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- IPL 2018: CSK vs KKR, Fans recreate Jallikattu flash light moment
- IPL chairman seeks govt's help for conducting matches in Chennai
- சென்னைvsகொல்கத்தா: சேப்பாக்கத்தில் 'நேருக்கு நேராக' மோதிக்கொள்ளும் 'வீரர்கள்' இவர்கள் தான்!
- IPL 2018: CSK vs KKR:Toss and Playing XI
- CSK vs KKR match details out
- 'இது அன்பால சேர்ந்த கூட்டம் அழிக்க முடியாது'.. சிஎஸ்கே பிரபல வீரர்!
- Protest against IPL match: Seeman arrested
- 'சென்னை-கொல்கத்தா' மேட்சில் 'வர்ணனை' செய்ய மாட்டேன்:ஆர்.ஜே.பாலாஜி
- 3,30,000 litres of water used per day for an IPL match, say reports
- Eduda vandiya; Poduda whistle: Imran Tahir