'அவர்கள் பேட்டிங்கைக் கண்டு பயப்படுவோம் என நினைத்தனர்'.. யாரைச் சொல்கிறார் கோலி?

புகைப்பட உதவி IPL/Twitter

 

நேற்று பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் விக்கெட் இழப்பின்றி பெங்களூர் அணி இலக்கை எட்டியது. இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் பெரிய மாற்றம் எதுவுமில்லை என்றாலும், பெங்களூர் அணியின் ரன்ரேட் மைனஸில் இருந்து பிளஸ்க்கு மாறியுள்ளது. மேலும் பெங்களூர் அணியின் பிளே ஆஃப் சுற்று கனவுக்கும் இந்த வெற்றி உயிரூட்டியுள்ளது. 

 

இந்த நிலையில் வெற்றிக்குப்பின் பெங்களூர் அணியின் கேப்டன் கோலி கூறுகையில், "கடந்த வாரம் நாங்கள் வெளியேறி விடுவோம் என நினைத்தோம். ஆனால் அட்டவணை எங்களுக்காகத் திறந்துள்ளது. இன்னும் 2 போட்டிகளில் வெல்ல வேண்டும்.கிங்ஸ் லெவன் அணியின் பேட்டிங் வரிசையைக்கண்டு நாங்கள் பயப்படுவோம் என அவர்கள் நினைத்தனர். ஆனால் பவுலர்கள் தவறு செய்யவில்லை.

 

இழப்பதற்கு ஒன்றும் இல்லை என்ற நிலையில் உள்ள அணியை எதிர்கொள்ள மற்ற அணிகள் விரும்ப மாட்டார்கள் என நினைக்கிறேன். சரியான மனநிலையில் இருப்பது அவசியம். தகுதி பெறுவது பற்றி அதிகம் யோசிக்கவில்லை,'' என்றார்.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS