நேற்றிரவு நடைபெற்ற ஐபிஎல் ஆட்டத்தில் பஞ்சாப் அணி ஹைதாரபாத் சன் ரைசர்சை 15 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இதன் மூலம் முதல் 3 போட்டிகளிலும் வென்ற சன் ரைசர்சின் ஆதிக்கத்துக்கு, பஞ்சாப் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
பஞ்சாப் அணியின் முக்கிய வெற்றிக்கு கிறிஸ் கெயிலின் சதம்(104) முக்கியக் காரணமாக அமைந்தது. நடப்பு ஐபிஎல்லின் முதல் சதமாகவும் இது அமைந்துள்ளது. இந்த நிலையில், கெயிலின் பாணியை யாரும் காப்பியடிக்க முடியாது என, கேப்டன் அஸ்வின் அவரை வாழ்த்தியுள்ளார்.
வெற்றிக்குப் பின் அஸ்வின் அளித்த பேட்டியில், "இது ஒரு முழுமையான வெற்றி. கிறிஸ் கெய்ல் அவர்களிடமிருந்து வெற்றியைப் பறித்து விட்டார். கெய்ல் இன்னிங்ஸை வர்ணிக்க ஒரு வார்த்தைப் போதாது. அவரது ஆட்டப்பாணியை யாரும் காப்பியடிக்க முடியாது.
அது தனித்துவமான ஒரு பாணி. அதுவும் அவருக்கு ஆட்டம் சூடுபிடித்தால் அதற்கு இணையான ஒன்றை யாரும் செய்ய முடியாது,'' என தெரிவித்தார்.
RELATED NEWS SHOTS
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- Imran Tahir picks up his 50th wicket in the IPL
- Another big target for CSK! Can CSK repeat the magic?
- IPL 2018: KXIP vs CSK, Toss and Playing XI
- IPL 2018: RCB vs KXIP, who won the match?
- தொடரும் சோதனை: 'சேப்பாக்கத்தைத்' தொடர்ந்து புனேவிலும் 'ஐபிஎல்' போட்டிகள் நடப்பதில் சிக்கல்?
- Too early to judge his captaincy, KXIP player on Ashwin
- ஐபிஎல் 2018: கேப்டனாக 'முதல்' வெற்றியைப் பதிவுசெய்த 'அஸ்வின்'
- Match 2, KXIP vs DD: Who won the match?
- KL Rahul creates history; scores fastest 50 in 14 balls
- Match 2, KXIP vs DD: HOW DID KXIP PERFORM IN THE POWERPLAY?