‘இவரை ரூ.1 கோடிக்கு வாங்கியது எங்களுக்கு பெரும் லாபம்தான்’: பிரபல ஐபிஎல் அணி உரிமையாளர்!
Home > தமிழ் newsவரும் 2019-ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் 12-வது ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் வீரர்களுக்கான ஏலம் ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் மாநிலத்தில் நேற்று தொடங்கியது.
தொடக்க வீரராக, மனோஜ் திவாரி ஏலம் கேட்கப்பட்டார். பின்னர் அலெக்ஸ் ஹேல்ஸ், புஜாரா, மெக்குலம், கப்தில் உள்ளிட்டோர் ஏலம் கேட்கப்பட்டனர். எனினும் இவர்களை யாரும் வாங்க முன்வராத நிலையில், ஆஸ்திரேலிய தொடரில் சிறப்பாக ஆடியதால் முதல் சுற்றில், ஹனுமா விஹாரியை டெல்லி அணி ரூ. 2 கோடிக்கு எடுத்தது. இதே போல், வெஸ்ட் இண்டீஸ் ஹிட்மேயரை பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி ரூ.4.2 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.
முதலில் கிறிஸ் வோக்ஸ், ஜோர்டான், யுவ்ராஜ் சிங், நமன் ஓஜா, பென் மெக்டோர்மட் உள்ளிட்டோர் ஏலத்திற்கு எடுக்கப்படாத நிலை நீடித்தது. பின்னர் நிக்கோலஸ் போரான் மற்றும் மார்க்கஸ் ஹென்ரிக்கஸ் உள்ளிட்டோரை பஞ்சாப் அணி முறையே ரூ.4.2 கோடி மற்றும் ரூ.1 கோடிக்கு எடுத்தது. ஹைதராபாத் அணியோ, பாரிஸ்டோவை ரூ.2.2 கோடிக்கும், சஹாவை ரூ.1.2 கோடிக்கும் ஏலத்திற்கு எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் ப்ரதொயிட்டை கொல்கத்தா அணி ரூ.5 கோடிக்கும், டெல்லி அணி அக்சர் படேலை ரூ.5 கோடிக்கும் எடுத்தன.
பலரும் எதிர்பார்த்திருந்த யுவ்ராஜ் சிங், தொடக்கத்தில் ஏலத்திற்கு எடுக்கப்படாமல் இருந்து பின்னர் ஒருவழியாக மும்பை இந்தியன்ஸ் அணியினால் ரூ. 1 கோடிக்கு எடுக்கப்பட்டார். அவருடன், லஸித் மலிங்கா, அன்மோல் ப்ரீத் சிங், பரிந்தர் சரண், பங்கஜ் ஜஸ்வால், ரஷிக் தர் உள்ளிட்ட வீரர்களும் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மிகவும் காத்திருந்து கடைசியில் யுவ்ராஜ் சிங்கினை எடுத்தாலும், 'இப்படி ஒரு திறமைமிக்க விளையாட்டு வீரரை ரூ.1 கோடிக்கு ஏலத்தில் எடுத்துக்கொண்டதால் இதுவரை மும்பை இந்தியன்ஸ் வரலாற்றிலேயே இம்முறை அதிகம் சேமித்திருக்கிறோம். இது எங்களுக்கு பெரும் லாபம்தான்' என்று மும்பை இந்தியன்ஸ் அணி உரிமையாளரான ஆகாஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.
If you are wondering why this took time...we've just got back to senses!
— Mumbai Indians (@mipaltan) December 18, 2018
WELCOME TO MUMBAI, @YUVSTRONG12 💙💙💙💙#CricketMeriJaan #IPLAuction pic.twitter.com/Zj6E80g7w4