'இன்னைக்கு ஐபிஎல் ஏலம் தொடங்குது'.. சென்னைக்கு வரப்போற அந்த,'ரெண்டு வீரர்கள் யாருப்பா'?

Home > தமிழ் news
By |
'இன்னைக்கு ஐபிஎல் ஏலம் தொடங்குது'.. சென்னைக்கு வரப்போற அந்த,'ரெண்டு வீரர்கள் யாருப்பா'?

ஜெய்ப்பூரில் 12வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டிக்கான ஏலம் இன்று மதியம் 2.30 மணியளவில் தொடங்க இருக்கிறது.இந்த ஏலத்தில் பங்கேற்பதற்க்காக மொத்தம் 1,003 வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.

 

ஐபிஎல் நிர்வாகம் மொத்தம் 346 வீரர்கள் அடங்கிய இறுதிப் பட்டியலை வெளியிட்டுள்ளது.இதில் 70 வீரர்கள் மட்டுமே ஏலம் மூலம் அணிகளுக்காக தேர்வு செய்யப்படுவார்கள்.ஏலம் நடைபெறும் நிகழ்வினை,ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் நேரடியாக  ஒளிப்பரப்பு செய்கிறது.நட்சத்திர வீரரான ஷிகர்த வானை,ஹைதராபாத் அணியிடமிருந்து டெல்லி அணி வாங்கியுள்ளது.மேலும் கம்பீர், ஜேசன் ராய்,ஜூனியர் டாலா, பிளங்கட், சமி,மேக்ஸ்வெல் உள்ளிட்ட வீரர்களை அணியிலிருந்து நீக்கியுள்ளது.

 

சென்னை அணியினை பொறுத்தவரை,மார்க் உட், கனிஷ்க் சேத் ஷிடிஸ் சர்மா ஆகிய வீரர்களை அணியிலிருந்து நீக்கியுள்ளது.மேலும் ஏலத்தில் அதிகபட்சம் ரூ.8.40 கோடிக்கு 2 இந்திய வீரர்களை மட்டும் எடுக்கலாம்.இதனால் சென்னை அணி எந்தந்த வீரர்களை ஏலத்தில் எடுக்க போகிறது,என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

 

மேலும் இந்த முறை அணிகளின் அதிகபட்ச சம்பள எல்லையானது  66 கோடி ரூபாயில் இருந்து ரூ.80 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.இது வரும் ஆண்டுகளில் 82 கோடி முதல் 85 கோடியாவும் அதிகரிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இந்நிலையில் அணிகளின் அதிகபட்ச வீரர்கள் எண்ணிக்கை 27 என்பதிலிருந்து 25 ஆக குறைக்கப்பட்டுள்ளது.அணிகள் அதிகபட்சம் 8 வெளிநாட்டு வீரர்களை தக்கவைத்து கொள்ளலாம்.மேலும் எல்லா அணியிலும் குறைந்தது 18 வீரர்கள் இருக்க வேண்டும் என்ற நிபந்தனை உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

IPL, IPL 2019 PLAYER AUCTION, IPL 2019