பஞ்சாப் அணியின் ஆலோசகர் சேவாக்கிற்கும்-அணியின் உரிமையாளர் பிரீத்தி ஜிந்தாவிற்கும் இடையே அஸ்வினால் மோதல் ஏற்பட்டுள்ளதாக, தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகின்றன.

 

இதுகுறித்து ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், " ராஜஸ்தான் அணியுடனான தோல்விக்குப்பின் வீரர்களின் ஓய்வறைக்கு சென்ற பிரீத்தி, அஸ்வினை ஏன் முன்னதாக களமிறக்கினீர்கள்? என கேள்வி கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.சூழ்நிலை கருதி சேவாக் அமைதி காத்ததாகவும், ஆனால் பிரீத்தி வெற்றி பெறும் அணியில் தொடர்ந்து மாற்றங்கள் செய்வதால் தான் தோற்க நேரிடுகிறது என தொடர்ந்து கோபமாகப் பேசினாராம்.

 

இதனால் நடப்பு ஐபிஎல்லுடன் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடனான தனது 5 ஆண்டுகால ஒப்பந்தத்தை முறித்துக்கொள்ளும் முடிவில், சேவாக் இருப்பதாக கூறப்படுகிறது. பிரீத்தியின் இந்த செயல் குறித்து, மற்றொரு உரிமையாளரிடம் பேசிய சேவாக்,‘ கிரிக்கெட் நடவடிக்கையில் அவர், தலையிட வேண்டாம், விலகி இருக்கச் சொல்லுங்கள்,’ என, கூறியதாக தெரிகிறது.

 

எனினும் பஞ்சாப் அணியின் மற்றொரு உரிமையாளர் மோகித் பர்மன் கூறுகையில்,‘‘ என்னைப் பொறுத்தவரையில் இது ஒரு பிரச்சினையே அல்ல. இதுகுறித்து சேவாக், பிரித்தி ஜிந்தாவிடம் பேசவுள்ளேன்,’’ என தெரிவித்துள்ளார்.

 

தற்போதைய  நிலையில் பஞ்சாப் அணி இதுவரை 10 போட்டிகளில் விளையாடி 6-ல் வெற்றி பெற்றுள்ளது. இன்னும் உள்ள நான்கு போட்டியில் இரண்டில் வெற்றி பெற்றால் முதல் நான்கு இடத்திற்குள் முன்னேறிவிடும்.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS