நடப்பு ஐபிஎல்லில் கொல்கத்தா அணிக்காக விளையாடி வந்த கவுதம் கம்பீர், டெல்லி அணிக்காக தேர்வு செய்யப்பட்டு, கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார்.

 

ஆனால் கொல்கத்தா அணிக்காக 2 முறை கோப்பை வென்று கொடுத்த கம்பீர், டெல்லி அணியின் கேப்டனாக அவ்வளவு பிரகாசிக்கவில்லை. இதுவரை டெல்லி அணி ஆடிய 6 போட்டிகளில் 5-ல் தோல்வி, 1-ல் வெற்றி என புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்துள்ளது.

 

இந்த நிலையில், டெல்லி அணியின் கேப்டன் பதவியிலிருந்து தான் விலகுவதாக கவுதம் கம்பீர் அறிவித்துள்ளார். கம்பீரின் இந்த முடிவைத் தொடர்ந்து ஸ்ரேயாஸ் ஐயர் டெல்லி அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

 

நாளை மறுநாள் புதிய கேப்டன் தலைமையில் டெல்லி அணி கொல்கத்தா அணியைச் சந்திக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS