ஓபிஎஸ் மற்றும் உறவினர் மீதான சொத்துக்குவிப்பு புகாரில் விசாரணைக்கு உத்தரவு - தமிழக அரசு
Home > தமிழ் newsதமிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் குடும்பத்தினர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் விசாரணை நடத்தக்கோரி திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார். பதில் மனு தாக்கல் செய்யக் கோரி தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், தமிழக அரசு சார்பில் இன்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில் ஓ பன்னீர்செல்வம் மற்றும் குடும்பத்தினர் மீதான புகார் மீது விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. முன்னதாக கடந்த வாரம் ஆர் எஸ் பாரதி தொடர்ந்த வழக்கின் மீதான விசாரணையில் புகாரளித்து மூன்று மாதங்களாகியும் இதுவரையில் விசாரணை நடத்தாதது ஏன் என லஞ்ச ஒழிப்புத்துறையிடம் உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது.
திமுக எம்பியான ஆர் எஸ் பாரதி மார்ச் 10ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறையிடம் அளித்த புகாரில் ஓ பன்னீர்செல்வம் தனது அரசு பதவியை தவறாக பயன்படுத்தி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும் மேலும் தனது குடும்பத்தினர், உறவினர்கள், தொழில் பங்குதாரர்கள் மற்றும் பினாமிகளின் பெயர்களிலும் பெரும் தொகையை முதலீடு செய்துள்ளதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.