முதன்முறையாக டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் அந்தஸ்து ஆப்கானிஸ்தான் அணிக்குக் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து நாளை(ஜூன்14) பெங்களூரின் சின்னச்சாமி அரங்கில், இந்திய அணியுடன் ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் ஆப்கான் அணி விளையாடவுள்ளது.

 

இதுகுறித்து ஆப்கான் அணியின் கேப்டன் எங்கள் அணியில் இந்திய அணியைக் காட்டிலும், சிறந்த சுழற்பந்துவீச்சாளர்கள் இருக்கின்றனர் என்று பெருமையாகத் தெரிவித்துள்ளார்.மேலும் நாங்கள் இந்தியாவுக்கு சுழற்பந்து வீச்சில் அச்சுறுத்தல் கொடுப்போம் என, அந்நாட்டு சுழற்பந்துவீச்சாளர்கள் ரஷித்கான், முகம்மது நபி, முஜிபூர் ஆகியோர் சவால் விடுத்துள்ளனர்.

 

இந்தநிலையில் அனுபவத்தை விலைகொடுத்து வாங்க முடியாது என ஆப்கான் வீரர்களுக்கு, இந்திய அணியின் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் பதிலடி கொடுத்து இருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், "அனுபவம் எப்படிப்பட்டது என்பதை ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்அணியைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

 

30 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொண்ட அணி என விமர்சித்தாலும், அனுபவ வீரர்கள் கொண்ட சிஎஸ்கேதான் சாம்பியன் பட்டம் வென்றது. ஆதலால், அனுபவத்தை ஒருபோதும், யாராலும் விலைக்கு வாங்க முடியாது. அதுபோலத்தான் இந்திய அணி அனுபவம் மிகுந்தது,'' என தெரிவித்துள்ளார்.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS