"கடலில் விழுந்து நொறுங்கிய பயணிகள் விமானம்"...188 பேர் கதி என்ன?
Home > தமிழ் newsஜகார்த்தாவில் இருந்து பங்க்கால் பினாங் தீவுக்கு சென்ற இந்தோனேஷியாவை சேர்ந்த பயணிகள் விமானம் கடலில் விழுந்து நொறுங்கியதாக ஜகர்த்தா விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.லயன் ஏர் விமான நிறுவனத்துக்கு சொந்தமான இந்த விமானத்தில் விமானப் பணியாளர்கள் உள்பட 188 பேர் இருந்துள்ளனர்.
தி லயன் ஏர் ந்தோனேஷியா தலைநகர் ஜகர்த்தாவிலிருந்து, பங்க்கால் பினாங் தீவுக்கு இடையே, பயணிகள் விமான சேவையை வழங்கி வருகிறது.இந்த நிறுவனத்தின் ஜெடி-610 என்ற எண்ணுடைய இந்த விமானம் தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து பன்ங்கால் பினாங் நகரத்துக்கு சென்று கொண்டிருந்தது.இந்நிலையில் இந்திய நேரப்படி இன்று அதிகாலை 6.20 மணிக்கு வழக்கம்போல் ஜகர்த்தாவிலிருந்து தனது பயணத்தை தொடங்கியது.ஆனால் வானில் பறக்க தொடங்கிய சில நிமிடங்களில் விமான கட்டுப்பாடு அறையுடன் தொடர்பு இல்லாமல் போனது.
இதனையடுத்து ஜகர்த்தா விமான நிலைய கட்டுப்பாடு அறை அதிகாரிகள்,ஜேடி-610 பயணிகள் விமானம் காணாமல் போனதாக அறிவித்தார்கள்.ஜேடி-610 விமானத்தில் விமானப் பணியாளர்கள் உள்பட 188 பேர் இருந்ததாகவும் அதில்,178 பெரியவர்கள், 1 குழந்தை, இரண்டு கைக்குழந்தைகள், 2 விமானிகள், 5 விமானப் பணியாளர்கள் இருந்ததாக பிபிசியின் செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.
இந்நிலையில் விபத்துக்குள்ளான விமானத்தில் பாகங்கள் கடலில் மிதப்பதாக,இந்தோனீசிய துறைமுக அதிகாரி சுயாதி என்பவர் கூறியதாக இந்தோனீசிய ஊடகங்கள் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
We're following reports that contact has been lost with Lion Air flight #JT610 shortly after takeoff from Jakarta.
— Flightradar24 (@flightradar24) October 29, 2018
ADS-B data from the flight is available at https://t.co/zNM33cM0na pic.twitter.com/NIU7iuCcFu