தொடர்ந்து துரத்தும் சோகம்...அதிகரிக்கும் உயிர் பலி: சின்னாபின்னமான சுற்றுலா நகரம்!

Home > தமிழ் news
By |
தொடர்ந்து துரத்தும் சோகம்...அதிகரிக்கும் உயிர் பலி: சின்னாபின்னமான சுற்றுலா நகரம்!

இந்தோனேசியாவை  புரட்டிப்போட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,400 ஆக அதிகரித்துள்ளது

.

இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் சுமார் 2 லட்சம் மக்கள் வீடு மற்றும் உடமைகளை இழந்து நிர்கதியாய் நிற்கிறார்கள்.இந்தோனேசிய மக்களின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிப்பது சுற்றுலாத்துறை.ஆனால் நிலைமை இன்னும் சீராகாததால் நாட்டின் பொருளாதாரம் முற்றிலுமாக முடங்கியுள்ளது.

 

மேலும் தற்போதிருக்கும் நிலைமையை பயன்படுத்தி வீடுகளிலும், கடைகளிலும் கொள்ளையடிக்கும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன.இதுவும் மக்களுக்கு பெரும் தலைவலியாக அமைந்துள்ளது.இதனிடையே இந்தோனேசியா வெப்ப மண்டலம் என்பதால் சடலங்கள் வேகமாக அழுகி தொற்றுநோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.இதுவும் மக்களுக்கு கடும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

 

இதனிடையே நேற்று 1,234 ஆக இருந்த உயிரிழப்பு எண்ணிக்கை இன்று 1,400ஆக அதிகரித்துள்ளது. பல இடங்களில், சாலை போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப் பட்டிருப்பதால் மீட்புப் பணிக்கு வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது.

EARTHQUAKE, TSUNAMI, INDONESIA