இயற்கை எரிபொருளில் இயங்கிய, இந்தியாவின் முதல் தனியார் விமானம்!

Home > தமிழ் news
By |
இயற்கை எரிபொருளில் இயங்கிய, இந்தியாவின் முதல் தனியார் விமானம்!

கடந்த வாரம் நிகழ்ந்த சுதந்திர தின விழாவில் மரபு சார்ந்த எரிபொருளை உற்பத்தி செய்து அதன் மூலம் பெட்ரோல் போன்ற மரபுசாரா வளங்களுக்கு மாற்றாக எத்தனால் போன்ற எரிவாயுக்களை பயன்படுத்த இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருந்தார்.

 

இந்நிலையில் இயற்கை எரிபொருளில் இயங்கக் கூடிய இந்திய நாட்டின் முதல் தனியார் விமான  பயணம் வெற்றிகரமாக நடந்தேறியுள்ளது.  உத்தரகாண்டின் டேராடூனில் இருந்து டெல்லிக்கு முதல் பயணத்தை மேற்கொண்ட இந்த விமானம் டெல்லி விமான நிலையத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளது.

 

முன்னதாக ஐக்கிய அமெரிக்க நாடுகளின் தீர்மானத்தில், பெட்ரோல் வளங்களுக்காக  அரபு நாடுகளை சார்ந்து இருக்கக் கூடாது என ஒரு மனதாக முடிவெடுக்கப் பட்டிருந்தது. கனடாவும் சவுதி அரேபிய நாடுகளுக்கு எதிராக கடந்த வாரம் பேசியதில் இருந்து, தற்போது மரபு சார்ந்த எரிபொருளை இந்தியா பயன்படுத்தத் தொடங்கியுள்ளதும், அடுத்து பேட்டரி கார்களை இயக்க இந்தியா திட்டமிட்டிருப்பதும் உலக அரங்கில் கவனிக்கத்தக்க ஒரு  விஷயம்.

FLIGHT, BIOFUELFLIGHT, INDIA