‘பைலட் ஆக ஆசைப்பட்ட இந்திய வீரர்’.. அதான் ஆஸி தொடரில், பந்த பறக்க விடுறாரோ? வைரல் பேட்டி!

Home > தமிழ் news
By |
‘பைலட் ஆக ஆசைப்பட்ட இந்திய வீரர்’.. அதான் ஆஸி தொடரில், பந்த பறக்க விடுறாரோ? வைரல் பேட்டி!

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா விளையாடும் தொடர் டெஸ்ட் போட்டிகளின் 3வது ஆட்டத்தின் தொடக்க வீரர்களாக மயங்க் அகர்வால் மற்றும் ஹனும விஹாரி களமிறங்கினர். மெல்பெர்ன் டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் 76 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 42 ரன்களும் குவித்த, மயங்க் அகர்வாலின் சிறப்பான ஆட்டம் பலரையும் கவர்ந்தது.


முன்னதாக கர்நாடக அணிக்காக ரஞ்சிப் போட்டிகளில் 3700க்கும் அதிக ரன்களைக் குவித்த மயங்க் அகர்வால் 27 வயதானவர். இவர் அண்மையில் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு அளித்துள்ள பேட்டியில், சிறு வயது முதலே தனக்கு விமானத்தை இயக்கும் பைலட்டாக வேண்டும் என்கிற ஆசை இருந்ததாகவும் அதற்காக அறிவியல் துறையை தேர்ந்தெடுத்து படிக்க விரும்பியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


எனினும் தான் கிரிக்கெட் ஆடுவதைத் தவிர வேறொன்றும் செய்ய மாட்டேன் என்றும், தன் விருப்பத்துக்கு செயல்பட தன் பெற்றோர்கள் விடவில்லை என்றும் குறிப்பிடவில்லை. உண்மையில் தன் பெற்றோர்கள் தன் விருப்பத்துக்கு சுந்திரமாக முடிவெடுக்க அனுமதித்தாகவும் தெளிவுபடுத்தியுள்ளார்.


மேலும், தற்போது சிட்னியில் நடைபெற்று வரும் கடைசி டெஸ்ட் போட்டியில் 77 ரன்களைக் குவித்த மயங்க் அகர்வால், மெல்போர்ன் டெஸ்ட்டுக்கு முன்னர்,  அதுதான் தனது அறிமுக டெஸ்ட் போட்டி என்று இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியபோது சில நொடிகள் உறைந்துபோய் நின்றுவிட்டதாகவும் கூறியுள்ளார்.

 

BCCI, AUSVIND, TEAMINDIA, MAYANKAGARWAL, PILOT, DREAM, CRICKET