திருவாரூரில் குழாய் மூலம் கொண்டுசெல்லப்படும் பெட்ரோல்.. விளைநிலங்களுக்கு பாதிப்பா..? இந்தியன் ஆயில் விளக்கம்!

Home > தமிழ் news
By |
திருவாரூரில் குழாய் மூலம் கொண்டுசெல்லப்படும் பெட்ரோல்.. விளைநிலங்களுக்கு பாதிப்பா..? இந்தியன் ஆயில் விளக்கம்!

திருவாரூரில் விளைநிலங்களில் இருந்து குழாய்கள் மூலம் பெட்ரோல் கொண்டு செல்லப்படும் திட்டத்தை அறிமுகப்படுத்தும் வகையில், வழிநெடுக குழாய்கள் அமைக்கப்படும் பணிகள் தீவிரப்படுத்தப்படவுள்ளன.


முன்னதாக மீத்தேன், ஹைட்ரோகார்பன் போன்ற திட்டங்கள் விளைநிலங்களை அழிக்கப்படுவதற்கு எதிராக முறையே நெடுவாசல், கதிராமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களும், பல்வேறு அமைப்புகளும், சமூக ஆர்வலர்களும் போராட்டங்களை தொடர்ச்சியாக நடத்தினர்.


இந்நிலையில், மேற்கண்ட இந்த திட்டத்துக்கும் பல்வேறு தரப்புகளில் இருந்தும் எதிர்ப்புகள் வரவே, பாதுகாப்பாக குழாய் மூலம் பெட்ரோல் கொண்டு செல்லப்பட உள்ளதால் விளைநிலங்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்றும் குழாய் பதித்த பின்னர் மீண்டும் விவசாயம் செய்யலாம் என்றும் திருவாரூரில் விளைநிலத்தில் குழாய் பதிக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில், அவர்களுக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

INDIANOIL, THIRUVARUR, ONGC, TAMILNADU