'ரெண்டும் வேற வேறங்க.. உங்களுக்கு புரியனும்னா புத்தகம் அனுப்புறேன்’.. ட்ரம்புக்கு பள்ளி மாணவியின் பதிலடி!

Home > தமிழ் news
By |
'ரெண்டும் வேற வேறங்க.. உங்களுக்கு புரியனும்னா புத்தகம் அனுப்புறேன்’.. ட்ரம்புக்கு பள்ளி மாணவியின் பதிலடி!

அமெரிக்காவில் தற்போது பனிப்பொழிவுடன் கூடிய பருவகால நிலை நீடித்து வருவதால், முன்னாடி நிற்பவர் கூட தெரியாத அளவுக்கு சீதோஷ்ண நிலை இருப்பதால், வாகனங்கள் இயக்குவதில் சிரமம் உண்டாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல், 1600 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

 

இதனை வெளிப்படுத்தி, தனது ட்விட்டரில், ‘புவி வெப்பமாயதலால், புவியில் நிகழ்ந்ததுதான் என்ன? முந்தைய வரலாறுகளை தோற்கடிக்கும் அளவுக்கு இந்த முறை இவ்வளவு பனிப்பொழிவு இருக்கிறதே?’ என அதிபர் ட்ரம்ப் பதிவிட்டுள்ளார். 

 

இதற்கு ட்ரம்புக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியாவின் அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த  18 வயது பெண், அஸ்தா சர்மா ‘உங்களை விட 54 வயது இளையவளான நான் தற்போதே உயர்நிலைக் கல்வியை முடித்திருந்தாலும், எனக்கு தெரிந்தவரை பருவகாலநிலையும் சீதோஷ்ணநிலையும் ஒன்றல்ல என்பதை உங்களுக்கு தெரியப்படுத்துகிறேன். வேண்டுமானால் நான் படிக்கும் என்சைக்ளோபீடியாவை அனுப்பி வைக்கிறேன், உங்களுக்கு புரியவில்லை என்றால் அதனை படிக்கலாம். அந்த புத்தகத்தில் இதுபற்றிய விஷயங்கள் சரியாகச் சொல்லப்பட்டிருக்கும்’ என்று  ட்வீட் செய்து பேசியிருக்கிறார்.

 

இதற்கு 27 ஆயிரம் பேர் விருப்பக் குறியீட்டையும், 7 ஆயிரம் பேர் ரீ-ட்வீட்டும் செய்துள்ளனர்.  அதுமட்டுமல்லாம, பருவநிலை மாற்றம் குறித்து, அஸ்தா சர்மா ஆய்வு படிப்புகளை மேற்படிப்புகளாக தொடர விரும்பினால் உதவ தயாராக உள்ளதாகவும் பலரும் ட்வீட் செய்துள்ளனர். 

 

INDIA, DONALDTRUMP, SCHOOLSTUDENT, ASTHASARMAH, ASSAM, US, WEATHER, CLIMATE