வித்தியாசமாக செல்ஃபி எடுக்க ஆசைப்பட்டு...பலியான இந்திய தம்பதி!

Home > தமிழ் news
By |
வித்தியாசமாக செல்ஃபி எடுக்க ஆசைப்பட்டு...பலியான இந்திய தம்பதி!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில், மலை முகட்டில் நின்று செல்ஃபி எடுத்த இந்திய தம்பதி தவறி விழுந்து உயிரிழந்தனர்.

 

கேரள மாநிலம் செங்கனூரைச் சேர்ந்த விஷ்ணு விஸ்வநாத் மற்றும் மீனாட்சி மூர்த்தி ஆகியோர் அமெரிக்காவில் வசித்து வந்தனர்.இவர்கள் இருவரும் செல்ஃபி பிரியர்கள்.வித்தியாசமான இடங்களுக்கு சென்று அங்கிருந்து செல்ஃபி எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவிடுவது இவர்களின் வழக்கம்.

 

இந்நிலையில் கலிபோர்னியாவில் உள்ள யோசமிட்டி தேசியப் பூங்காவிற்கு சென்ற இருவரும் டாஃப்ட் பாயிண்ட் என்ற இடத்திற்கு சென்றார்கள்.இந்த பகுதி மிகவும் ஆபத்தான பகுதியாகவும்.அந்த பகுதியில் இருவரும் ஆர்வமாக செல்ஃபி எடுத்து கொண்டு இருந்தார்கள்.அப்போது திடீரென கால் இடறி 800 அடி பள்ளத்தாக்கில் விழுந்து உயிரிழந்துள்ளனர்.

 

பூங்காவின் பல பகுதிகளை டாஃப்ட் பாயிண்டில் நின்று பார்க்கலாம் என்பதால் சுற்றுலாப் பயணிகள் அங்கிருந்து போட்டோ எடுப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனவே, இந்திய தம்பதி தவறி விழுந்து உயிரிழந்தது எப்படி என அமெரிக்க காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டிருக்கின்றனர்.

ACCIDENT, SELFIE, INDIAN COUPLE