அன்றாடம் உணவுக்கு மக்கள் திண்டாடி வரும் வேளையில் இரண்டு வேளை உணவு, தங்குமிடம் 10 ரூபாய்க்கு ஹைதராபாத்தில் அளித்து வருகின்றனர்.

 

ஹைதராபாத்தின் ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு உதவும் பொருட்டு, 'சேவா பாரதி' என்ற அமைப்பினர் இந்த சேவையை செய்து வருகின்றனர்.

 

இதுகுறித்து சேவா பாரதி அமைப்பினர் கூறுகையில், "அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளைக் காண வரும் உறவினர்கள், அவரின் குடும்ப உறவினர்களுக்காக இதை கடந்த 2013-ம் ஆண்டில் இருந்து நடத்தி வருகிறோம். தற்போது நாள் ஒன்றுக்கு 250 பேர் வரை தங்குகிறார்கள். வாரத்துக்கு 7 ஆயிரம் பேர்வரை வருகிறார்கள்.

 

இன்று முதல் நாங்கள் 10 ரூபாயில் மதிய உணவும், காலை உணவும் வழங்குகிறோம். வெகுதொலைவில் இருந்து வரும் நோயாளிகள், அவர்களின் உறவினர்கள் இங்குத் தங்கி உணவு சாப்பிடலாம்,'' என தெரிவித்தனர்.

 

இந்த சேவை பொதுமக்கள் மத்தியில் தற்போது மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது.

BY MANJULA | JUN 15, 2018 7:24 PM #HYDERABAD #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS