பீகாரில் நடைபெற்ற 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மொத்த மதிப்பெண்களைக் காட்டிலும்,கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

 

நேற்று பீகார் மாணவர்களுக்கான 12-ம் வகுப்பு பள்ளி தேர்வு வாரியம் முடிவுகள் வெளியாகின. இதில் மொத்த மதிப்பெண்களைக் காட்டிலும் கூடுதல் மதிப்பெண்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. மேலும், தேர்வுக்கு வராத மாணவர்களுக்கும் மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளன.

 

இதுகுறித்து பீகாரில் உள்ள அர்வால் மாவட்டத்தைச் சேர்ந்த பீம் குமார் என்ற மாணவன் கூறுகையில், “கணித பாடத்திற்கு நான் தேர்வு எழுதிய மொத்த மதிப்பெண் 35. ஆனால் 38 மதிப்பெண் பெற்றதாக தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இது எனக்கு ஆச்சரியத்தைத் தரவில்லை. காரணம் இது போன்று ஏற்கனவே நிகழ்ந்துள்ளது” தெரிவித்தார்.

 

இதேபோல ஜன்வீன் சிங் என்ற மாணவி பேசுகையில், உயிரியல் தேர்வுக்கு நான் செல்லவில்லை, ஆனால் எனக்கு மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.  பீகார் பள்ளி கல்வி வாரியத்தின் இந்த குளறுபடி மாணவர்கள் மற்றும் பெற்றோரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

BY MANJULA | JUN 9, 2018 11:35 AM #CLASS12EXAMS #BIHAR #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS