டிராஃபிக்கில் பொறுமையிழந்ததால், ஓடிச்சென்று சிக்னல் கம்பத்தை அடித்து உடைத்த டிரைவர்!

Home > தமிழ் news
By |
டிராஃபிக்கில் பொறுமையிழந்ததால், ஓடிச்சென்று சிக்னல் கம்பத்தை அடித்து உடைத்த டிரைவர்!

பலரும் வண்டி ஓட்ட பயிற்சி எடுக்கும் அளவுக்கு, அதிகபட்சமாக 120 விநாடி சிக்னலில் பொறுமையாக நிற்பதற்கான பயிற்சியை எடுப்பதில்லை. அதற்கு மன பயிற்சி அவசியம்.  சூழ்நிலை காரணமாக வேகமாக சென்றாக வேண்டிய கட்டாயத்தில் பலர் இருப்பர்.

 

அப்படித்தான் சமீபத்திய வீடியோ ஒன்று பிரபலமாகி வருகிறது. சீனாவின் டியான்ஜின் நகரில் நீண்ட நேரமாக டிராஃபிக் சிக்னலில் காத்திருந்த இளைஞர் ஒருவர் பொறுமையை இழந்து, சிக்னல் கம்பத்தை அடித்து உதைத்து கீழே தள்ளிய சம்பவம்  சிசிடிவியில் பதிவாகி, அது வைரலாகி வருகிறது.

 

நம் வேகத்துக்கு ஒரு கட்டுப்பாடுதான் சிக்னல். பச்சை விளக்குக்கு எண்கள் ஏறுமுகத்திலும், சிவப்பு விளக்குக்கு எண்கள் இறங்குமுகத்திலும் செல்லும். ஏறுமுகத்தில் செல்லும் பச்சை விளக்கு முடிந்தவுடனேயே ரெட் சிக்னல் விழும். ரெட் சிக்னல் விழுந்தவுடனேயே முதல் வரிசையில் நிற்பவர்களுக்கு பின்னால் அடிக்கும் ஹாரன் சத்தம் காதைக் கிழிக்கும். அந்த அளவுக்கு பொறுமையில்லாதவர்கள் இடையே கொஞ்சம் கட்டுப்பாடு இருப்பதே ஆச்சரியமாகத்தான் இருந்தது. இந்த இளைஞரைப் போல ஒரு சிலர் ஆத்திரமடைந்து இப்படி இறங்கியிருப்பது அதிர்ச்சிதான். இவருக்கு அபராதம் விதித்து போலீசார் கண்டித்துள்ளனர்.

TRAFFICCOP, TRAFFICSIGNAL, IMPATIENTDRIVER, WAITINGATSIGNAL