நடிகர் விஜய்யின் சிகரெட் காட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தது குறித்து, பாமக இளைஞரணித்தலைவர் அன்புமணி ராமதாஸ் விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து சென்னையில் பத்திரிகையாளர்களிடம் இன்று பேசிய அன்புமணி ராமதாஸ், ''எனக்கும் விஜய்க்கும் தனிப்பட்ட விரோதம் எதுவுமில்லை,''என்றார். அப்போது பத்திரிகையாளர்கள் விஜய் தமிழன் என்பதால் தான்? என்று கேள்வி எழுப்பினர். பதிலுக்கு அன்புமணி, ''விஜய் தமிழன் என்றால், நான் ஜப்பானிலிருந்து வந்தவனா? என்று கேள்வி கேட்டார்.
தொடர்ந்து, ''இதனை விஜய்யின் நல்லதுக்காக சொல்கிறோம். அவர் உடல்நலம் நன்றாக இருக்க வேண்டும். நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டும்.சிகரெட் பிடிப்பதால் புற்றுநோய் ஏற்பட்டு உடல்நலம் பாதிக்கக்கூடும் என்பதால் தான் புகை பிடிப்பது போல நடிக்கக்கூட வேண்டாம் என்று சொல்கிறோம்.விஜய்க்கு மட்டுமல்ல விஜய் ரசிகர்களுக்கும் இதுதான்,'' என்றார்.
RELATED NEWS SHOTS
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- விஜய் 63: பேரரசுடன் கைகோர்க்கிறாரா விஜய்?...விளக்கம் இதோ!
- 'இவரோடு ஒரு படம் பண்ணுங்கள்'.. இளம் இயக்குநருக்கு சிபாரிசு செய்த விஜய்!
- சர்கார் அப்டேட்: விஜய்-ஏ.ஆர்,ரஹ்மான் 'கூட்டணியில்' இதுதான் முதல்முறை!
- 'தளபதி' ரசிகர்களுக்கு 'ஸ்பெஷல்' விருந்தளித்த சன் பிக்சர்ஸ்.. வீடியோ உள்ளே!
- 'சர்கார்' படத்தில் விஜய் புகைக்கும் காட்சி நீக்கப்பட வேண்டும்
- 'ஆளப்போறான் தமிழன்'.. மீண்டும் இணைந்த 'மெர்சல்' கூட்டணி!
- சர்கார்: 'தளபதி' ரசிகர்களுக்கு 'விருந்தளித்த' சன் பிக்சர்ஸ்!
- 'தளபதி 62+பிக்பாஸ்' இரண்டையும்.. ஒருசேரக் கலாய்த்த 'தமிழ்படம் 2'
- தளபதி 62 படத்தின் 'தலைப்பு' இதுதான்!
- காதல், திருமணம் எதுவென்றாலும் 'இவரோடு' மட்டும்தான்.. தெறிக்கவிட்ட சிம்பு!