சர்வதேச அங்கீகாரம் தந்து ‘பேபிசிட்டர்’ ரிஷப் பண்ட்டினை கவிரவித்த ஐசிசி!
Home > தமிழ் newsஒருநாள் போட்டி மற்றும் டெஸ்ட் தொடர் கிரிக்கெட்டுகளுக்கான ஆடவர் பிரிவுகளின் 2018-ஆம் ஆண்டுக்கான சிறந்த கனவு நட்சத்திர வீரர்களைத் தேர்வு செய்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்து கவுரவித்துள்ளது.
2018-ஆண்டுக்கான சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கான சிறந்த ஆடவர் டெஸ்ட் கிரிக்கெட் அணி மற்றும் ஆடவருக்கான சர்வதேச ஒருநாள் போட்டிக்கான கிரிக்கெட் அணியினையும் தனித்தனியே அறிவித்துள்ளது ஐசிசி. மேலும் இந்த விபரங்களை ஐசிசி தங்களது அலுவல் ரீதியலான ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளதோடு, இந்த அணி பட்டியல்களில் தேர்வான பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சிறந்த கிரிக்கெட் வீரர்களுக்கு தன் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளது.
இதன்படி, 2018-ஆம் ஆண்டுக்கான ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் கனவு அணிக்கான சிறந்த வீரர்கள் பட்டியலில் பல நாட்டு வீரர்களுடன் இந்திய வீரர்களான ரோகித் ஷர்மா, விராட் கோலி, குல்தீப் யாதவ், பும்ரா (பேட்டிங் வரிசையில்) உள்ளிட்டவர்கள் தேர்வாகியுள்ளனர். இதேபோல் 2018-ஆம் ஆண்டுக்கான ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் கனவு அணிக்கான சிறந்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலி, ரிஷப் பண்ட், பும்ரா (பேட்டிங் வரிசையில்) தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா விளையாடி பெற்ற இந்த 72 வருடகால வரலாற்று வெற்றியில் 350 ரன்கள் அடித்தும், ஆஸ்திரேலிய மண்ணில் சதமடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பராகவும், அடிலெய்ட் போட்டியில் 11 கேட்ச் பிடித்து உலக சாதனையும் புரிந்த பண்ட் ஐசிசியால் கவுரவிக்கப்பட்டுள்ளார் என்பது கிரிக்கெட் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ள்து.
அதுமட்டுமல்லாமல் இரண்டு அணிகளுக்குமே கேப்டனாக விராட் கோலி தேர்வு செய்யப்பட்டுள்ளது கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை கொடுத்துள்ளது. ஐசிசியின் ஒருநாள் கிரிக்கெட்டுக்கான கனவு அணியில் கோலி இரண்டாவது முறையும், ஐசிசியின் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான கனவு அணியில் கோலி முதல் முறையாகவும் இடம் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ICC announces men's Test and ODI Teams of the Year. Virat Kohli and Jasprit Bumrah included in both the teams. Rishabh Pant makes it to the Test team, Rohit Sharma and Kuldeep Yadav included in the ODI team. pic.twitter.com/Ss3FY5QWBO
— ANI (@ANI) January 22, 2019